search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிட்டன் தாஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

    தற்போது இந்த போட்டியின் போது வங்காளதேசம் அணியின் விக்கெட் கீப்பர் எடுத்த ரன் அவுட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் இக்கட்டான சூழலில் வங்காளதேசம் அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே காற்றில் மிதந்த படி ஸ்டம்பிங் செய்தார்.

     


    இதில் இலங்கை அணியின் தசுன் ஷனகா 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.

    தற்போது இதே போன்று வங்காளதேச விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலர் தோனி மற்றும் லிட்டன் தாஸ் செய்த ஸ்டம்பிங் வீடியோக்களை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.



    • வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையவில்லை
    • அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் முதல் போட்டியில் நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் ஆசிய கோப்பைக்கான தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மேலும், இலங்கைக்கு எதிராக நாளை மோத இருக்கும் போட்டிக்காக இலங்கை செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அனாமுல் ஹக் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1254 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லிட்டோன் தாஸ் இந்தியாவுக்கு எதிராக 21 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் ரன்அவுட் ஆக்கியதாகல் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

    இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2-ந்தேதி அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் வங்காளதேசம் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது.

    இவ்வாளவு பெரிய ஸ்கோரை வங்காளதேசம் சேஸிங் செய்ய வாய்ப்பில்லை, வெற்றி இந்தியாவுக்கு என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார்.

    அர்ஷ்தீப் வீசிய போட்டியின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், புவி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஷமி வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தெறிக்கவிட்டார். இதனால் வங்காள தேசம் 6 ஓவரில் 60 ரன்களை எட்டியது. அத்துடன் தாஸ் 21 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், 7 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியதும், லிட்டோன் தான் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ரன்களுக்கு ஓடும்போது, பவுண்டரி கோடு அருகில் இருந்து கே.எல். ராகுல் வீசிய பந்து ஸ்டம்பை நேரடியாக தாக்கியதால் ரன்அவுட் ஆனார்.

    இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளின் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியதாவது:-

    டைனிங் ஹாலில் நாங்கள் உட்கார்ந்து இருக்கும்போது, விராட் கோலி அங்கு வந்தார். அப்போது லிட்டோன் தாஸ்க்கு அவருடைய பேட்டை பரிசாக வழங்கினார். என்னைப் பொறுத்த வரையில், லிட்டோன் தாஸ்க்கு இது ஒரு உத்வேகத்திற்கான தருணம், என்றார்

    ×